For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தளபதி உட்பட உயிரிழந்த 14 பேரின் நினைவு தூண் டிசம்பர் 8 திறக்கப்படுவதாக அறிவிப்பு.!

08:40 PM Nov 20, 2023 IST | Web Editor
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து   முப்படை தளபதி உட்பட உயிரிழந்த 14 பேரின் நினைவு தூண் டிசம்பர் 8 திறக்கப்படுவதாக அறிவிப்பு
Advertisement

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் முப்படை தளபதி உட்பட
உயிரிழந்த 14 பேரின் பெயர்கள் அடங்கிய நினைவு தூண்  டிசம்பர் 8ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 2021 ஆம்
ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில்
பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன் 2 ம் ஆண்டு
நினைவையொட்டி ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் கடந்த 3 மாத காலமாக நினைவு தூண் அமைக்கப்பட்டு வந்தது.

தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், விபத்து ஏற்பட்ட தினமான டிசம்பர் 8ம் தேதியே இந்த நினைவு தூணை திறக்க ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர். உயிரிழந்த 14 பேரின் பெயர்களும், ”ஆன்மா அழியாதது, எந்த ஆயுதத்தாலும் அதை துளைக்க முடியாது, எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது, தண்ணீராலும் அதை ஈரப்படுத்த முடியாது, காற்றாலும் அதை உலர்படுத்த முடியாது" என்கிற வாசகமும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் துாணில் பொறிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement