2023-ம் ஆண்டில் சர்ச்சையை கிளப்பிய தமிழ் சினிமா பிரபலங்கள்!
2023-ம் ஆண்டில் சர்ச்சையை கிளப்பிய தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் பற்றி காணலாம்...
இயக்குநர் மோகன் ஜி
இயக்குனர் செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் பகாசூரன். இப்படத்தில் கோபி, நட்டி நடராஜன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 2023-ம் ஆண்டு வெளியான இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது. ஆன்லைன் செயலி மூலம் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை பற்றி இப்படத்தில் பேசியுள்ளார், இயக்குனர் மோகன் ஜி. இந்த அளவுக்கு பெண்கள் மோசமாக உள்ளார்களா என்ற பேச்சுகளும், ட்ரோல்களும் எழுந்தன.
இயக்குநர் மாரிசெல்வராஜ்
‘மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், கமல் முன்னிலையிலேயே தேவர் மகன் படத்தை விமர்சனம் செய்தார். ‘மாமன்னன்’ உருவாவதற்கு ‘தேவர் மகன்’தான் காரணம் என்றும் படத்தை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகளை கடக்க முடியாமல் தவித்ததாகவும் கூறினார். ‘தேவர் மகன்’ படத்தில் நடித்த இசக்கி தான் மாமன்னன் என கூறினார்.
இந்நிலையில், வலைதள வாசிகள் தேவர் மகன் படத்தை ஒழுங்காக மாரி பார்க்கவில்லை என கூறினார்கள். மாரிசெல்வராஜ் கூறுகையில் என்னுடைய வலியை தான் மேடையில் பகிர்ந்தேன். அதை கமல் சாரும் புரிந்து கொண்டார். நான் ஒவ்வொரு முறை படம் எடுக்கும் போதும் சின்ன வயதில் சாதியை வைத்து நான் பட்ட அடி இன்னமும் நினைவுக்கு வரும் அதனை மறக்க இயலாது ஏனால் நான் பட்ட வலி அவ்வளவு பெரியது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
‘லியோ’ படத்தின் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசப்பட்டதில் சர்ச்சை எழுந்தது. பிறகு மியூட் செய்யப்பட்டது. நான் ரெடி தான் வரவா பாடலில் புகைப்பிடித்த மாதிரியான காட்சிகளும், அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க என்றும் விஜய் பாடியது போல் இருந்தது. இந்த லைன் படத்தில் ‘டவுன் டட டவுன் டட ட்வுன்’ என்று ஹம்மிங் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இது குறித்து லோகேஷ் பேசும் போது படத்தில் அந்த கேரக்டர்காக தான் வைத்தேன் என்று கூறினார்.
மன்சூர் அலிகான்
செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இது சர்ச்சையானது. இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில் தனது புகழை கெடுத்ததாக த்ரிஷா, சிரஞ்சீவி, குஷ்பு ஆகியோர் மீது மன்சூர் வழக்கு தொடர்ந்தார். நடிகை த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கூறிய நீதிமன்றம், மன்சூர் அலி கானுக்கு 1 லட்சம் ருபாய் அபராதம் விதித்து இருக்கிறது. த்ரிஷா பெருந்தன்மையாக மன்னித்த நிலையில், மன்சூர் அலி கான் தேடி சென்று இப்படி நீதிமன்றத்தில் பல்பு வாங்கி இருக்கிறார்.
இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவான ஜப்பான், தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தியை இதுவரை இயக்கிய இயக்குநர்களில் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். ஆனால், கார்த்தியை பருத்தி வீரன் திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்திய அமீர் கலந்து கொள்ளவில்லை.
இயக்குனர்கள் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சசிகுமார். அதன் பின்னர் 2008-ம் ஆண்டு “சுப்பிரமணியபுரம்” படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்திற்காக பிலிம்பேர் விருது, உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில் 2007-ம் ஆண்டு வெளியான அமீரின் “பருத்திவீரன்” படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா அமீர் மீது சில குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.