For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Sivakarthikeyan பேச்சால் வெடித்த சர்ச்சை - கோபமடைந்த  தனுஷ் ரசிகர்கள்!

04:44 PM Aug 14, 2024 IST | Web Editor
 sivakarthikeyan பேச்சால் வெடித்த சர்ச்சை   கோபமடைந்த  தனுஷ் ரசிகர்கள்
Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனின் பேச்சு சர்ச்சையான நிலையில், தனுஷ் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து, நடிகராக மாறி இன்று முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்தகேயனுக்கு 3 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் வாய்ப்பு வழங்கினார். இதில், சிவகார்த்திகேயன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பெரிய அளவில் கவனம் பெற்றன.

இந்த சூழலில் கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்தார். சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக மாறிய பிறகும், தன்னை நம்பி நடிகர் தனுஷ் எதிர்நீச்சல் படத்தை தயாரித்தது குறித்து பெருமையாக பேசி வந்தார்.

இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் லிங்கு சாமி, மிஷ்கின், வெற்றிமாறன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘கொட்டுக்காளி’ படத்தையும், படத்தின் இயக்குநர் வினோத் ராஜையும் புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் தான் இவர்களையெல்லாம் கண்டுபிடித்து வாழ்க்கை கொடுத்தேன், வளர்த்து விட்டேன் என்று எல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழகிட்டார்கள். நான் அந்த மாதிரியான ஆள் இல்லை. ஆனால் நான் என்னுடைய நண்பர் ஒருவரை அறிமுகப் படுத்துவது போலதான் இந்த படத்தை உங்கள் முன் வைக்கிறேன்" என்று பேசியிருந்தார்.

சிவகார்த்திகேயன் யார் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை. இருப்பினும் அவர் தனுஷைப் பற்றித்தான் பேசுகிறார் என எண்ணி ஆத்திரமடைந்த தனுஷ் ரசிகர்கள் சிவகாத்திகேயனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷ் தனக்கு அளித்த வாய்ப்பை பெருமையாகப் பேசும் பழைய வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

Tags :
Advertisement