’நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம்’ - இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற 1
விசைப்படகையும் 7 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. கைது செய்யபட்ட மீனவர்களை இலைங்கை கடற்படையினர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்
பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், உடனடியாக மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்வேறுகட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
இராமேஷ்வரம் மீனவர்கள் வரும் 13ஆம் தேதி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர் எனவும் அதனைத் தொடர்ந்து வரும் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , 19ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யும் வரை ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.