For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர் மழை - முழு கொள்ளளவை எட்டியது மணிமங்கலம் ஏரி..!

08:03 AM Nov 16, 2023 IST | Web Editor
தொடர் மழை   முழு கொள்ளளவை எட்டியது மணிமங்கலம் ஏரி
Advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தொடர் மழையால் 1800 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணிமங்கலம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது.

Advertisement

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு
மாவட்டத்தில் 900க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில் 99 ஏரிகள் அதன் முழுக்
கொள்ளளவை எட்டியுள்ளன. 201 ஏரிகள் 70 முதல் 90 சதவீதம் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஏரியாக விளங்கி
வருவது மணிமங்கலம் ஏரி. பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி 1800 ஏக்கர்
பரப்பளவு உடையது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி மணிமங்கலம் அதனைச் சுற்றியுள்ள சேத்துபட்டு, மலைப்பட்டு, கரசங்கால் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1500 ஏக்கருக்கு விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

கடந்த 2017 ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் முதன்முதலில் மணிமங்கலம் ஏரியை குடிமராமத்து திட்டத்தின் கீழ் புணரமைப்பு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார். இதையடுத்து பணிகள் நிறைவடைந்த பின்பு நிவர் புயலின் போது இரண்டு முறை அதன் முழு கொள்ளளவை எட்டியது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமான 18.6 அடியை மணிமங்கலம் ஏரி
எட்டியுள்ளது. இதையடுத்து ஏரியின் கலங்களின் வழியாக உபரி நீரானது அடையாறு ஆற்றுக்கு வெளியேறி வருகிறது.

மணிமங்கலம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஏற்கனவே நிவர் புயலின் போது இரண்டு முறை அதன் முழு கொள்ளளவை எட்டியது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமான 18.6 அடியை எட்டி களங்கள் வழியாக நீர் வெளியேறி வருகிறது.

இதனால் அடையாறு கரையோர பகுதியில் வசித்துவரும் பொது மக்களை
பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் ஏரி நிரம்பியதின் மூலம் மூன்று போகத்திற்கு விவசாயம் செய்ய தண்ணீர்
பற்றாக்குறை இருக்காது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Tags :
Advertisement