தொடர் கனமழை | வைரலாகும் டெல்லி விமான நிலைய வீடியோ!
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், டெல்லி விமான நிலைய மேற்கூரை பாதிக்கப்பட்டு தண்ணீர் கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டெல்லியில் இன்று காலையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 4 மணி நேரமாக பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் வாட்டி வதைத்த வெயில் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவித்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என்கிறபோதிலும் அடுத்த வீடுகள் மற்றும் குடியிறுப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் இக்கட்டான சூழலில் தாங்கள் மாட்டிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இன்று பெய்த தொடர் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், விமான நிலையத்தில் விபத்து நிகழ்ந்த பகுதி மூடப்பட்டுள்ளது. விமானப் புறப்பாடு மற்றும் தரையிறங்குவது மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், உலகிலேயே மிகச் சிறந்த விமான நிலையம் என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டி டெல்லி விமானப் பயணிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். டெல்லி விமான நிலைய மேற்கூரை பாதிக்கப்பட்டு தண்ணீர் கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Airport Scenes #DelhiRains pic.twitter.com/yzXzzLheFC
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) June 27, 2024