For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர் கனமழை | தென் மாவட்டங்களில் உதவிகள் கோர வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு!

01:48 PM Dec 18, 2023 IST | Web Editor
தொடர் கனமழை   தென் மாவட்டங்களில் உதவிகள் கோர வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு
Advertisement

திருநெல்வேலி,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி,  தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள்,  தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் "வாட்ஸ்ஆப்" எண் மற்றும் X பக்கத்தில் தெரிவிக்கலாம். 

Advertisement

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட கடைகளில் மழைநீர் புகுந்தது.  தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் மிதமான மழை பெய்யும் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்,  அதிகனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள்குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் "டிவிட்டர்"-பக்கதில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும்,  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி. மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர். எனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (Social Media) மூலமாகவும் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப்எண் மற்றும் டிவிட்டர்" மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறுமம் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாட்ஸ்அப் எண் : 8148539914

சமூக வலைதள பக்கங்கள்:  Twitter :  @tn_rescuerelief   |  @tnsdma

Advertisement