For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒரு நாள் மழையால் மிதக்கும் அயோத்தி...6 அதிகாரிகள் மீது நடவடிக்கை!

02:02 PM Jun 29, 2024 IST | Web Editor
ஒரு நாள் மழையால் மிதக்கும் அயோத்தி   6 அதிகாரிகள் மீது நடவடிக்கை
Advertisement

ஒரு நாள் மழைக்கே அயோத்தியின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டுமானப் பணிகளை சரியாக செய்யவில்லை என அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் ராமர் கோயிலின் மேற்கூரையில் நீர் கசிவதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அயோத்தியின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் ராமர் கோயி்லுக்குச் செல்லும் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கோயிலுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனுடன் சாலையோரம் இருந்த வீடுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலையின் பல பகுதிகளில் குண்டும், குழிகளும், ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள ஸ்ரீராம் மருத்துவமனையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் சாலை கட்டுமானப் பணிகளில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி  துருவ் அகர்வால், அனுஜ் தேஷ்வால், பிரபாத் பாண்டே, ஆனந்த் குமார் துபே, ராஜேந்திர குமார் யாதவ் மற்றும் முகமது ஷாஹித் ஆகிய 6 அதிகாரிகளையும் மாநில அரசு அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அகமதாபாத்தைச் சேர்ந்த புவன் இன்ஃப்ராகாம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags :
Advertisement