For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடரும் தீ விபத்துகள்.. டெல்லி மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழப்பு!

09:33 AM May 26, 2024 IST | Web Editor
தொடரும் தீ விபத்துகள்   டெல்லி மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழப்பு
Advertisement

டெல்லியில் குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் கருகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கத்தால் தீ விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதனிடையே நேற்று (மே 25) குஜராத்தின் ராஜ்கோட் சிறார் விளையாட்டு மைதானத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவர், சிறுமியர் உட்பட 27 பேர் உயிரழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நேற்று இரவு 11.30 மணியளவில் கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை பராமரிப்பு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

மருத்துவமனையிலிருந்து புதிதாக பிறந்த 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டரில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (மே 26) காலை ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இதுவரை தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement