கன்னியாகுமரி | போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒலிபெருக்கி வசதி அறிமுகம்!
தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போக்குவரத்து போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட
பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த இடங்களில் போக்குவரத்து போலீசார் சைகை மூலமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். இம்முறையினால் சற்று தூரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுறது.
இதையும் படியுங்கள்: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!
இதனை போக்கும் விதமாக அழகிய மண்டபம் சந்திப்பு, தக்கலை பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் என 3 இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் மைக்கில் பேசி போக்குவரத்தை ஒழுக்கு படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்ட் உதயசூரியன் தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.