For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொகுதி பங்கீடு : அதிமுக - தேமுதிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

01:14 PM Mar 05, 2024 IST | Web Editor
தொகுதி பங்கீடு   அதிமுக   தேமுதிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை
Advertisement

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இணைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சிலதினங்களுக்கு முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்தனர்.

அதிமுக தரப்பில் தேமுதிக-விற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியானது. கிருஷ்ணகிரி, விருதுநகர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலூர், திருச்சி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்த நிலையில் அதிமுக - தேமுதிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தொகுதி பங்கீடு குறித்து பேச தேர்தல் குழு பட்டியலை இன்று மாலைக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement