For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை:  முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் 'பிரசாதம்' என்ன தெரியுமா?

10:01 AM Jan 22, 2024 IST | Web Editor
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை   முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும்  பிரசாதம்  என்ன தெரியுமா
Advertisement

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்ளும்  முக்கிய பிரமுகர்களுக்கு 'மஹாபிரசாதம்' வழங்கப்படுகிறது.

Advertisement

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதனையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், முக்கிய தொழிலதிபர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் விழாவில் கலந்துகொள்ளும்  முக்கிய பிரமுகர்களுக்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில்  'மஹாபிரசாதம்' வழங்கப்படுகிறது. இதற்காக  20,000-க்கும் மேற்பட்ட பிரசாத பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதில் நெய், 5 வகையான உலர் பழங்கள், சர்க்கரை, உளுந்து மாவு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட 2 லட்டுகள்,  சரயு நதி நீர்,  அட்சதை, வெற்றிலை தட்டு உள்ளிட்டவை இருக்கும்.

இதையும் படியுங்கள்: முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள், காய்கறிகள் விலை உயர்வு!

இந்த பாக்கெட்டுகள் அனைத்தும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டுளளது.  ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பிறகு முக்கிய பிரமுகர்களுக்கு அவை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.   இது தவிர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு, கோயில் வளாகத்தில் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விருந்தினர்களுக்கு பருப்பு வகைகள் மற்றும் திணை சார்ந்த உணவுகளுடன் சுத்தமான சைவ உணவு வழங்கப்படும்.  இந்த உணவுகளை வாரணாசி மற்றும் டெல்லியைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் தயார் செய்கின்றனர்.  இது தவிர சில இனிப்பு பதார்த்தங்களும் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement