For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்... அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

01:30 PM Nov 10, 2023 IST | Web Editor
இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்    அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
Advertisement

கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் கூட்டணி தயாரிக்கும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடக்கிறார். 

Advertisement

இது குறித்து கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் இணைந்து,  தென்னிந்தியத் திரைத்துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பார்வையாளர்களைக் கவரும் வகையில்,  அடுத்தடுத்து உருவாக உள்ள பல மெகா பட்ஜெட் படங்களின் வரிசையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. கனெக்ட் மீடியா படங்களுக்கான ஸ்டுடியோவாக இருக்கும்.  கனெக்ட் மீடியாவும்,  மெர்குரி குழுமமும் இணைந்து மக்கள் ரசனைக் குறிய திரைப்படங்களைத் தயாரிக்கும்.

மெர்குரி குரூப் இந்தியா,  தென்னிந்தியப் பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொண்டு,  கனெக்ட் மீடியாவுடன் இணைந்து மெர்குரி மூவிஸ் என்ற சிறப்புப் பிரிவாக இங்குச் செயல்பட உள்ளது.  புதிய ஸ்ட்ரீமிங் கதைகள் , ஒரிஜினல் கதைகள்,  தென் சினிமாவில் பல புதிய வகை கதைகளின் வழியாக ஒரு புதிய உலகத்தை இந்த கூட்டணி ரசிகர்களுக்கு வழங்கும். சிறந்த வணிகத்துடன், ஆரோக்கியமான பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகளையும் ஆராயும்.

இந்த அற்புதமான கூட்டணி,  தங்கள் முதல் திரைப்படமாக, தென்னிந்தியத் திரையுலகில் மாபெரும் சாதனையாளரான,  இசை மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்க உள்ளது.  இத்திரைப்படத்தில் பன்முக திறமையாளர்,  தென்னிந்தியாவின் நட்சத்திர நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார்.  இதன் படப்பிடிப்பு அக்டோபர் 2024 இல் தொடங்க உள்ளது,  2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இத்திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement