Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: சச்சின் பைலட் நம்பிக்கை

11:32 AM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தானில் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  ராஷ்ட்ரீய லோக் தாந்திரிக் கட்சி,  பாரத பழங்குடியினர் கட்சி,  ஆம் ஆத்மி,  அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன.  எனினும், ஆளும்கட்சியான காங்கிரஸ்-பிரதான எதிர்க்கட்சியான பாஜக இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

மாநில அரசின் மக்கள் நலப் பணிகள் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித் தொகை,  ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்,  பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற 7 முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்து,  காங்கிரஸார் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்… நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு!

இந்த நிலையில் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில்,  மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும்,  காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் வழக்கமாக உள்ள நிலையில்,  மக்களின் மனநிலை இந்த முறை அரசாங்கத்தை மாற்றும் போக்கை மாற்றும் என்றும்,  மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.  ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை நாங்கள் பெறுவோம்.  மாநிலத்தின் மக்கள் அதனை வழங்குவார்கள்.

மேலும் நாங்கள் கட்சிக்காக கூட்டாக தேர்தல் பணி செய்துள்ளோம்.  இது இரண்டு அல்லது மூன்று நபர்களைப் பற்றியது அல்ல.  ராஜஸ்தானின் காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது என்று பைலட் தெரிவித்தார்.

ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் மொத்தம் 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி தோல்வியை சுமார் 5.25 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.  வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது.  2018 இல் காங்கிரஸ் 99 இடங்களையும்,  பாஜக 73 இடங்களையும் வென்றது.  பிஎஸ்பி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அசோக் கெலாட் முதல்வர் பதவியை ஏற்றார்.

Tags :
CongressIndianews7 tamilNews7 Tamil UpdatesRajasthanRajasthan ElectionSachin Pilotstate election
Advertisement
Next Article