Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்தியபிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றுமா? - கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

08:08 PM Nov 30, 2023 IST | Web Editor
Advertisement

மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.

Advertisement

மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை பாஜக ஆட்சி செய்து வருகின்றது. உத்தரப் பிரதேசம் போல் ஹிந்துத்துவா கொள்கையை அதிகம் பின்பற்றும் மக்களை கொண்ட மாநிலமாக ம.பி. உள்ளது. இங்கு ஹிந்துத்துவா அரசியலை மையமாக கொண்டு பாஜக தொடர் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங் கார்கே மற்றும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சனாதனத்துக்கு எதிராக பேசிய கருத்துகள் ம.பி. தேர்தலில் எதிரொலித்தது.

கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் ம.பி.யில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், ஒரே ஆண்டில் எம்எல்ஏக்களின் அணி தாவலால் ஆட்சி பறிபோனது. இந்த முறை பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நோக்கில், பெண்களுக்கு மாத உதவித் தொகை, இலவச பேருந்து சேவை, இலவச மின்சாரம் போன்ற அடுக்கடுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியுள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 102 முதல் 123 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. பாஜக 100 இடங்களைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், 5 மாநிலங்களிலும் வெற்றி பெறும் கட்சிகளுக்கு அதீத பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு குறைவாக உள்ளதால் கடைசி நேர மாற்றங்கள்கூட நிகழலாம். வட இந்தியாவில் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் பாஜகவின் நம்பிக்கையை உடைக்க ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களின் வெற்றி காங்கிரஸுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags :
BJPCongressexit pollKamalnathMadhya Pradesh Election 2023news7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article