For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தேர்தலில் வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இடிப்பார்கள்" - பிரதமர் மோடி பேச்சு!

04:36 PM May 17, 2024 IST | Web Editor
 காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தேர்தலில் வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இடிப்பார்கள்    பிரதமர் மோடி பேச்சு
Advertisement

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

Advertisement

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத்தாக்கல் செய்ய மே-14 ஆம் தேதி இறுதி நாள் என்பதால், ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடுவோர் மே - 14ம் தேதி மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில்,  5 தொகுதிகளில் வருகின்ற மே – 20 ஆம் தேதி 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி,  உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாரபங்கியில் பாஜக-வின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உத்தரபிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது :

"காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது. மறுபுறம், I.N.D.I.A. கூட்டணி குழப்பங்களை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் முடிவடைய, I.N.D.I.A. கூட்டணி உறுப்பினர்கள் பிரிந்து செல்ல தொடங்கி உள்ளனர்.

I.N.D.I.A. கூட்டணியின் அனைத்துத் தலைவர்களும் பிரதமர் ஆக வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார்கள்.ரேபரேலி தொகுதி மக்கள் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.இதைக் கேட்ட "சமாஜ்வாதி தலைவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கா உங்களது வாக்கை வீணடிப்பீர்களா? இப்படிப்பட்டவர்களிடம் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா?

இதையும் படியுங்கள் : VJS51 – திரைப்படத்தின் முக்கிய அப்பேட் இன்று மாலை வெளியாகிறது!

உங்களுக்கு ஒரு பணியாளர் தேவைப்பட்டால், நீங்கள் திறமையுள்ள ஒருவரைத் தேர்வு செய்வீர்கள். துஷ்பிரயோகம் செய்யக்கூடிய ஒருவரை நீங்கள் பணியமர்த்த மாட்டீர்கள்.
நான் ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராக இருக்கிறேன், நாங்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்காகவும் பாடுபடுவோம். மேலும், 500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு ராமர் கோயில் கட்ட முடிந்தால், அதற்கு உங்கள் வாக்கு பலம்தான் காரணம்.
தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெபாசிட் இழப்பதை உறுதி செய்ய வேண்டும்"

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags :
Advertisement