சோனம் வாங்சுக் கைதுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்
லடாக் பிரதேசத்திற்கு தனிமாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பு அட்டவணையில்ன் 6 வது பிரிவில் லடாக்கை சேர்க்க கோரியும் கடந்த 10 ஆம் தேதி முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற வந்தது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் காயமடைந்தனர்.
இந்த வன்முறைக்கு சோனம் வாங்சுக்கின் பேச்சுதான் காரணம் என்று குற்றம் சாட்டி சோனம் வாங்சுக் நேற்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சோனம் வாங்சுக் கைதுக்கு கட்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”லடாக்கில் நிலவும் சூழ்நிலையை அரசாங்கம் பரிதாபகரமாக கையாண்டதையும், அதைத் தொடர்ந்து சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் இந்திய தேசிய காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நெருக்கடியின் மையத்தில் லடாக் மக்களின் விருப்பங்களை பாஜக தொடர்ந்து காட்டிக் கொடுப்பதுதான் உள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக லடாக் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற மக்களின் கூக்குரல்களை பொறுமையாகக் கேட்பதற்குப் பதிலாக, மோடி அரசு வன்முறையால் பதிலளிக்கிறது.
லடாக்கிற்கு ஆறாவது அட்டவணை அந்தஸ்தை பாஜக உறுதியளித்திருந்தது, ஆனால் அந்த இப்போது வாக்குறுதி முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் லடாக்கில் அமைதியைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை. பல தசாப்தங்களாக, இந்த அழகான எல்லைப் பகுதி இணக்கமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்து, ஜனநாயகத்தின் உணர்வையும் தேசிய பாதுகாப்பின் நோக்கத்தையும் நிலைநிறுத்தி வருகிறோம். வன்முறையால் உயிரிழந்த நான்கு அப்பாவி இளைஞர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். லடாக்கில் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் ஆகியவை மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. மேலும் காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லடாக்கிற்கு தனிமாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பு அட்டவணையில்ன் 6 வது பிரிவில் லடாக்கை சேர்க்க கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்.