Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடியின் தமிழக பயணத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு! தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாகவும் அறிவிப்பு!

10:10 PM May 28, 2024 IST | Web Editor
Advertisement

வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயல்வதாகவும், இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் ஜுன் 1-ம் தேதி நடைபெறுகிறது. 7-ம் கட்ட வாக்குப்பதி 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் ஜுன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 7 கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்நிலையில்,  7-ம் கட்டத் தேர்தல் பரப்புரை மே 29-ம் தேதி முடிவடையும் நிலையில்  பிரதமர் நரேந்திர மோடி மே 30-ம் தேதி முதல் 3 நாள் பயணமாக தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன் இந்தாண்டு தொடக்கம் முதல் ஏப்ரல் மாதம் வரை மோடி பலமுறை தமிழ்நாடு வந்து சென்றார். இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவும் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 30, 31 மற்றும் ஜுன் 1-ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி வரும் மோடி  கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபம் அல்லது அங்குள்ள தியானம் மண்டபத்தில் ஒரு நாள் (மே 31) தியானம் மேற்கொள்ள இருக்கிறார். அதன் பின் ( ஜூன் 1-ம்) தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமயிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இதைத் தொடர்ந்து ஜுன் 1-ம் தேதி தியானத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி இமயமலைக்கு சென்று தியானம் செய்தார். அதே போன்று இந்த தேர்தலின் போது தமிழகம் வருகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி நிகழ்வில் வேறு யார், யார் வருகிறார்கள் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்  பிரதமரை தமிழக அரசின் சார்பில் வரவேற்பார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்பார்கள் என பாஜகவினர் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயல்வதாகவும் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை தனது X தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

மே 30 முதல் ஜூன் 1 வரை நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது. வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags :
BJPCongressKanyakumariNarendra modinews7 tamilNews7 Tamil Updatesselvaperunthagai
Advertisement
Next Article