Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கூட்டணி குறித்து காங். ஆலோசனை - டெல்லி கூட்டத்திற்கு தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு!

03:57 PM Dec 27, 2023 IST | Jeni
Advertisement

டெல்லியில் நடைபெறும் கூட்டணி குறித்த காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில், 10 மாநிலங்களில் உள்ள பலமான கட்சிகளுடன் சுமூகமான தொகுதி பங்கீட்டை நடத்தி முடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு,  பீகார்,  உத்தரப் பிரசேதம்,  மேற்கு வங்காளம்,  ஜார்க்கண்ட்,  காஷ்மீர்,  பஞ்சாப், மகாராஷ்டிரா,  டெல்லி ஆகிய மாநிலங்களில் தொகுதி பங்கீடு செய்தால் பெரும்பாலான தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்த முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இதற்காக டெல்லியில் வரும் டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சி தேசிய தலைமை அழைப்பு விடுத்துள்ளது.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : “திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகி விட்டார்..!” - இபிஎஸ் பேட்டி

அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,  காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர்,  டாக்டர் செல்லகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார் தெரிவித்துள்ளார்.

Tags :
ALLIANCECongressKSAlagirimeetingPChidambaramTNCC
Advertisement
Next Article