Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை மும்பை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! ராகுல் காந்தியின் இந்திய நீதிப் பயணத்தை நிறைவு செய்து வைக்கிறார்!

10:03 AM Mar 16, 2024 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் நாளை மும்பையில் நிறைவடைகிறது.  இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்து வைக்கிறார்.

Advertisement

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை கடந்த ஜன.14 ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார்.  15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்த நீதிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  இந்த நீதிப் பயணத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

அவரின் இந்த நீதிப் பயணம் இன்று (மார்ச்.16) மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் நடைபெறுகிறது.  இதனைத் தொடர்ந்து அவர் நாளை மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் இந்த பயணத்தை நிறைவு செய்கிறார். பிரமாண்டமான பொதுக் கூட்டத்துடன் இப்பயணம் நிறைவடைகிறது.

ராகுல்காந்தியின் இந்திய நீதிப் பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவு செய்து வைக்கிறார்.  இதற்காக அவர் நாளை மும்பை செல்கிறார்.  முன்னதாக கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,  மும்பையில் நாளை நடைபெறும் ராகுல்காந்தியின் இந்திய நீதிப் பயணத்தில்  சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்,  ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ்,  மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,  ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Tags :
Bharat Jodo Nyay YatraCongressElection2024MK StalinMumbaiRahul gandhi
Advertisement
Next Article