For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவைத் தேர்தல் தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை...!

08:26 AM Jan 10, 2024 IST | Web Editor
மக்களவைத் தேர்தல் தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் இன்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்துகிறார்.

Advertisement

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் 'வார் ரூம்', தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, நேர்காணல் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் இன்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்துகிறார். இதைத்தொடர்ந்து, கட்சியின் பல்வேறு பிரிவுகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement