For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

J&K -ல் ஆட்சியை கைப்பற்றுகிறது இந்தியா கூட்டணி! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் முழு விவரம் இதோ!

07:47 PM Oct 05, 2024 IST | Web Editor
j amp k  ல் ஆட்சியை கைப்பற்றுகிறது இந்தியா கூட்டணி  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் முழு விவரம் இதோ
Advertisement

ஜம்மு மற்றும் காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. 

Advertisement

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசால் நீக்கப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள்

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், வெளியாகி உள்ளது.

Peoples Pulse கருத்துக்கணிப்புகள்:

இதன்படி, காங்கிரஸ் கூட்டணி 46 முதல் 50 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை வெற்றி பெறும். பிடிபி 7 முதல் 11 இடங்கள் வரை வெற்றி பெறும். இது தவிர, சுயேச்சை வேட்பாளர்கள் 4 முதல் 6 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என பீப்பிள் பல்ஸ் கருத்துகணிப்பில் கூறப்படுகிறது.

CVoter கருத்துக்கணிப்புகள்:

பாஜக இங்கிருந்து 27 முதல் 32 இடங்களைப் பெறலாம். அதேசமயம் காங்கிரஸ் மற்றும் நேஷனல் கான்பரன்ஸ் 40 முதல் 48 இடங்களைப் பெறலாம். அதேசமயம் பிடிபிக்கு 2 இடங்களும் மற்றவர்களுக்கு ஒரு இடமும் கிடைக்கலாம் சி ஓட்டர் கருத்துகணிப்பின் வாயிலாக தெரியவந்துள்ளது.

India Today-C Voter கருத்துக்கணிப்புகள்:

இந்தியா டுடே மற்றும் சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில், காங்கிரஸ் மற்றும் நேஷனல் கான்பரன்ஸ் கட்சி கூட்டணிக்கு அதிகபட்ச இடங்கள் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி, பாஜகவுக்கு 27-32 இடங்களும், காங்கிரஸ்-நேஷனல் கான்பரன்ஸ் 40-48 இடங்களும், பிடிபி 6 முதல் 12 இடங்களும், மற்றவை 6 முதல் 11 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dainik Bhaskar கருத்துக்கணிப்புகள்:

டைனிக் பாஸ்கர் கருத்து கணிப்பின்படி, பாஜக 20 முதல் 25 இடங்களையும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி 35-40 இடங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், பிடிபி 4-7 இடங்களையும் மற்றவர்களுக்கு 12 முதல் 16 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இப்படி அனைத்து கருத்துகணிப்புகளிலுமே ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியே ஆட்சி பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று ஹரியானா தேர்தல் கருத்துகணிப்புகளும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிரிக்கும் என தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்திருப்பதால் அக்கட்சியினர் குதூகலமடைந்துள்ளனர்.

Tags :
Advertisement