Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Jammu&Kashmir -ல் இந்தியா கூட்டணி முன்னிலை | டெல்லியில் தொடங்கிய கொண்டாட்டம்!

11:00 AM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்று வரும் சூழலில், தற்போது நிலவி வருவதால் டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 63.88 சதவீத வாக்கு கள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இங்கு தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதன்படி, இந்தியா கூட்டணி வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றது. காங்கிரஸ் -தேசிய மாநாட்டு கட்சி 50 தொகுதிகளிலும், பாஜக 34 தொகுதிகளிலும், பிடிபி 4 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 11 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதையும் படியுங்கள் : துனீஷியா அதிபராக மீண்டும் பதவியேற்கிறார் #KaisSyed!

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெருவதற்கான சூழல், தற்போது நிலவி வருவதால் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Tags :
celebrateCongressCongress AllianceDelhiJammu and KashmirNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article