Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பங்குச் சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி” - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

02:16 PM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியப் பங்குச்சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி செய்வதாக பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

புகாரில் தொடர்புடைய அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதவியும், அவரது கணவர் தவால் புச்சும் பங்குகள் வைத்திருந்ததாக ஹிண்டர்பர்க் அறிக்கை ஒன்றை கடந்த சனிக்கிழமை வெளியிட்டது. இது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

“இந்திய மக்களால் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் நிராகரிக்கப்பட்ட பிறகு  இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும், நிலையற்ற தன்மையை உருவாக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். ஹிண்டன்பர்க் அறிக்கையை பயன்படுத்தி நமது பங்குச்சந்தையை முடக்க பார்க்கின்றனர். ஹிண்டன்பர்க்கின் அறிக்கை சனிக்கிழமை வெளியாகிறது, ஞாயிற்றுக்கிழமை சலசலப்பு ஏற்படுகிறது. இதனால் திங்கள்கிழமை பங்குச் சந்தை சீர்குலைந்துள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் பாதுகாப்பான, நிலையான மற்றும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. சந்தை சீராக நடைபெறுவதை உறுதி செய்வது செபியின் பொறுப்பாக இருக்கிறது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, உச்சநீதிமன்ற மேற்பார்வையில் கடந்த ஜூலை மாதம் முழு விசாரணை முடிந்துவிட்டது. அப்போதெல்லாம் எதுவும் பேசாதவர்கள், தற்போது ஆதாரமற்ற தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிராக தொடர் பிரசாரங்களை மேற்கொள்ளும் ஜார்ஜ் சோரோஸ்தான் ஹிண்டன்பர்க்கில் முதலீடு செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வெறுப்புணர்ச்சியில், இந்தியா மீது காங்கிரஸ் வெறுப்பை வளர்த்து வருகிறது.
இந்திய பங்குச் சந்தை சீர்குலைந்தால் சிறு முதலீட்டாளர்கள் சிரமப்படுவார்கள். ஒட்டுமொத்த பங்குச்சந்தையையும் நொறுக்க காங்கிரஸ் விரும்புகிறது.

சிறுமுதலீட்டாளர்கள் முதலீட்டை நிறுத்தவும், இந்தியாவில் பொருளாதார முதலீடுகள் இருக்கக் கூடாது என்றும் விரும்புகிறார்கள்” என குற்றம்சாட்டினார்.

Tags :
BJPCongressHindenburgIndian Stock MarketRavi Shankar Prasad
Advertisement
Next Article