Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த காங்கிரஸ்.....!" - பிரதமர் மோடி ட்வீட்!

11:26 AM Mar 31, 2024 IST | Web Editor
Advertisement

கச்சத்தீவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலை  பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

Advertisement

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், கச்சத்தீவு பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி  விட்டுக்கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன. இந்த விசயம் ஒவ்வோர் இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது. காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று மக்களின் மனங்களில் பதியும் வகையில் மற்றொரு விசயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

அதோடு, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில், 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்ந்து வருகிறது என அவர் பதிவிட்டு உள்ளார்.

Tags :
BJPCongressElection2024Katcha TheevuPM ModiTN Republic
Advertisement
Next Article