திடீர் உடல்நலக் குறைவு - ஜார்க்கண்ட் இந்தியா கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கமாட்டார் என காங்கிரஸ் அறிவிப்பு!
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் இந்தியா கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கமாட்டார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்தியா கூட்டணி ஆரம்பிக்கப்பட்டு அதில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. நடைபெற்று வருகிற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு அதன்மூலம் தேர்தலை எதிர்கொள்கின்றன.
மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் இந்தியா கூட்டணி இடம்பெற்றிருந்தாலும் அங்கே தனித்தே களம் காண்கின்றன. ஏற்கனவே பீகாரில் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகிச் சென்றுள்ளார். இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மும்பை, கர்நாடகா, பீகார் மற்றும் டெல்லியில் நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் 7கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..
“ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் பேரணியில் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தற்போது அவரால் டெல்லியை விட்டு வர இயலவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜார்கண்ட் மாநிலம் சத்னாவில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிறகு, ராஞ்சி பேரணியில் நிச்சயமாக கலந்து கொள்வார்” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.