”அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாடு நடத்தியிருக்கும் விஜய்க்கு வாழ்த்துக்கள்” - நடிகர் விஷால்!
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது 35 வது படமான மகுடம் திரைப்படதில் நடித்து வருகிறார் . இத்திரைப்படத்தின் படபிடிப்பு நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஷால் மகுடம் படப்பிடிப்பு தளத்தில் அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும் குழு கலைஞர்களுக்கு மதிய உணவை பரிமாறினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”நடிகர் விஜயகாந்த் அனைவரையும் சரி சமமாக நடத்துவதில் முன்னுதாரணமாக இருந்து வந்துள்ளார். இன்றைய அரசியலில் விஜயகாந்த் இருந்திருந்தால் 2026 அரசியல் களம் வேறுமாதிரி இருந்திருக்கும். நடிகர் சங்க கட்டிடடம் கட்ட வேண்டும் என்ற விஜயகாந்த் கனவு இன்னும் 2 மாதங்களில் பணிகள் முடிந்து நனவாகும். இறுதி கட்டத்தை எட்டியுள்ள நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சினிமாவை பொறுத்தவரை சூதாட்டத்திற்கும் சினிமவிற்கும் ஒரே மாதிரி வரி விதிப்பதை குறைக்க வேண்டும். உள்ளூர் வரி குறைப்பு கேட்டு வருகிறோம். இந்த நிலையில் தரமனியில் உள்ள பிலிம் சிட்டி மோசமாக உள்ளது. இதனால் சினிமா படபிடிப்பிற்கு ஐத்ராபாத் செல்ல வேண்டி உள்ளது. தற்போது தமிழக அரசு 5 கோடியில் திறந்து வைத்துள்ள படபிடிப்பு தளம் வரவேற்கதக்கது. இது போன்று சினிமா துறைக்கு மாநில அரசு மேம்பாட்டு பணி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
விஜய் அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாட்டை நடத்தியதற்கு
வாழ்த்துகள். நல்லது செய்வது தான் அரசியல் என்றால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். இங்குள்ள வண்ணமயமான அரசி்யல் கொடிகளை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. ஆக்கபூர்வமானது ஒன்றும் தெரியவில்லை.
தூய்மைபணியாளர்களின் பணி என்பது சிறப்பான பணியாகும். ஆனால் அவர்களுக்கு கையுறை கூட இல்லாமல் பணியாற்றுவதை காணும் போது வருத்தமாக உள்ளது. எனவே தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதுடன் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் சாலை பாதுகாப்பு தமிழக அரசு வழங்க வேண்டும்”
என்று கேட்டுக் கொண்டார்.