For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்னும் இலக்கை அடைய தமிழ்நாட்டிற்கு வாழ்த்துகள் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

12:41 PM Jan 07, 2024 IST | Web Editor
1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்னும் இலக்கை அடைய தமிழ்நாட்டிற்கு வாழ்த்துகள்   மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Advertisement

கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், இயற்கை வளத்திலும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு, இந்த மாநாட்டை நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் மாநாடு தொடங்­கியது. அதனைத்தொடர்ந்து, தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­புரை ஆற்­றினார். அதன்­பின், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரை­யாற்­றினார்.

இந்த நிகழ்வில் மத்திய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்றார். அவருக்கு ஜல்லிக்கட்டு காளை அடக்கப்படும் சிலையை நினைவுப் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விழா மேடையில் பேசியதாவது:

“தமிழ்நாடு கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், இயற்கை வளத்திலும் சிறந்த மாநிலமாகும். அதிலும் காஞ்சிபுரம் பட்டு தனிச்சிறப்புடையது. தமிழ்நாடு வைத்திருக்கும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் உயர்ந்த இலக்கை விரைவில் அடைய வாழ்த்துகிறேன். 2030-ம் ஆண்டில் ஒரு டிலிரியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைய தொழில்துறை உதவும் என நம்புகிறேன்.

ஆதித்யா எல்.1 இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த திட்ட இயக்குநர் தமிழ்நாட்டை சேர்ந்த நிகர் சாஜி. அவருக்கு எனது பாராட்டுகள். இந்தியாவின் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி கூறினார். சென்னை வர்த்தக மையத்தை மத்திய, மாநில அரசு சேர்ந்து உருவாக்கியுள்ளது. இதுபோன்று இணைந்து செயல்பட்டால் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

7 ஜவுளி பூங்கா இந்தியாவில் வர உள்ளது. அதில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் அமைய உள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் சுமார் ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் ஜவுளி பூங்கா தமிழ்நாட்டில் தான் அமைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் உடனிருந்தார்.

பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்தில் மேல் பெரிதும் ஈடுபாடு உள்ளவர். அதனாலே புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் அடையாளமான செங்கோல் உள்ளது. உலகின் பத்தாவது பொருளாதாரத்தில் இருந்து 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. இந்தியா உலகின் மிகவும் இளமையான மக்களை கொண்டுள்ளது. அவர்களின் தேவைகள் பல வகைகளில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் 5வது இடத்தை இந்தியா அடைந்துள்ளது. ஜிடிபி 7%த்திற்கு மேல் இருக்கிறது. இந்தியாவில் பண வீக்கத்தை கட்டுக்குள் வைத்துள்ளோம். நூறாண்டு காலமாக தொடரும் காலனிய கலாச்சாரத்தை ஒழித்து, நமது நாட்டின் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். இந்தியாவின் 40%க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் பங்களிப்பு தமிழ்நாட்டில் இருந்து தான் வருகிறது. ஜிடிபி வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

தமிழ்நாடு தொழில் செய்வதற்கு மிகச்சிறந்த இடமாகும். 2037-ம் ஆண்டுக்குள் இந்தியா 35 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட பெரும் சக்தியாக மாறும். இதுவரை காணாத முதலீடுகளையும், உட்கட்டமைப்புகளையும், அந்நிய செலாவணிய கையிருப்பையும் இந்தியா தற்போது கண்டு வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவது இந்தியாவின் பெருமை.

இந்த மாநாட்டை நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் தமிழ்நாட்டின் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இதன்மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியும், பொருளாதாரமும் முன்னேறும். உலக முதலீட்டார்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்” 

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Tags :
Advertisement