FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற டி.குகேஷுக்கு பாராட்டு - ரூ.75லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற டி.குகேஷுக்கு ரூ.75லட்சத்திற்கான காசோலையை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்தார்.
கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை டி.குகேஷ் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் குகேஷ் எட்டியுள்ளார்.
14 சுற்றுகளின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகளையும், நகமுரா 8.5 புள்ளிகளையும் பெற்றனர். இதன் மூலம், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் சீனாவைச் சேர்ந்த டிங் லிரென எதிர்கொள்ள இருக்கிறார். அதோடு, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் குகேஷ் தனதாக்கியுள்ளார். அவருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.