For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஜஸ்தான் மாநில அமைச்சரவை நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் அனைத்து துறைகளிலும் குழப்பம்! - அசோக் கெலாட் குற்றச்சாட்டு!

06:24 PM Dec 25, 2023 IST | Web Editor
ராஜஸ்தான் மாநில அமைச்சரவை நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் அனைத்து துறைகளிலும் குழப்பம்    அசோக் கெலாட் குற்றச்சாட்டு
Advertisement

ராஜஸ்தான் மாநில அமைச்சரவை நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், அனைத்து துறைகளும் குழப்பத்தில் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில் கூறியுள்ளதாவது, “டிசம்பர் 3-ஆம் தேதி ராஜஸ்தான் மக்கள் பாஜகவிடம் ஆட்சியதிகாரத்தை வழங்கினர். ஆனால் 22 நாட்களுக்குப் பிறகும் அவர்களால் அமைச்சரவையை அமைக்க முடியவில்லை. இதனால் ஆட்சியே ஸ்தம்பித்துள்ளது. ராஜஸ்தான் மக்களிடம் தற்போது ஏமாற்றம் பரவத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் அனைத்து துறைகளும் குழப்ப நிலையில் உள்ளன. சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று ஊடக செய்திகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், எங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்த நிலைமையை தற்போதைய பாஜக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும், புதிய முறை அமல்படுத்தப்படும் வரை முந்தைய முறை தொடர வேண்டும். இவ்வாறு முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மக்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகள் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement