சமோசாவிற்குள் மசாலாவிற்கு பதில் இருந்த ஆணுறைகள், கற்கள், குட்கா!
மகாராஷ்டிரா மாநிலம் பூனே அருகே உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கேண்டினில் விநியோகிக்கப்பட்ட சமோசாவில் ஆணுறைகள், கற்கள், குட்கா போன்றவை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூனே அருகே பிம்ப்ரி-சின்ச்வாட் நகரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள கேண்டீனை ஒப்பந்த அடிப்படையில் தனிநபர் ஒருவர் நடத்தி வந்துள்ளார். இ ந்நிலையில் கேண்டின் ஒப்பந்ததாரரை டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் மாற்றியிருக்கிறது.
புதிதாக ஒப்பந்தம் பெற்றவர் பிம்ப்ரி-சின்ச்வாட் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் கேண்டீன் நடத்தி வந்த நிலையில், அவர் விநியோகித்த சமோசாவில் ஆணுறைகள், கற்கள், குட்கா போன்றவை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 27-ஆம் தேதி இந்த நிகழ்வு நடந்தேரியுள்ளது.
இதனை அடுத்து போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் புதிதாக ஒப்பந்தம் பெற்றுள்ள ஒப்பந்ததாரருக்கு அவப்பெயர் ஏற்படுத்த பழைய கேண்டீன் ஒப்பந்ததாரர் இவ்வாறு செய்தது அம்பலமாகியுள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.