For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட இயக்குநர் கௌதம் மேனனுக்கு நிபந்தனை - சென்னை உயர்நீதிமன்றம்!

05:53 PM Nov 23, 2023 IST | Web Editor
‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட இயக்குநர் கௌதம் மேனனுக்கு நிபந்தனை   சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement

துருவ நட்சத்திரம் திரைப்படத்தை திட்டமிட்டபடி நாளை வெளியிட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது. நிபந்தனைகளை செய்ய தவறும் பட்சத்தில் படத்தை வெளியிட தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. அத்துடன் படத்தை வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த படத்தை நாளை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

இதனிடையே நடிகர் சிம்பு நடிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் போட்டு, ரூ. 2.40 கோடியை பெற்ற கௌதம் மேனன் படத்தை முடிக்கவில்லை எனவும், பணத்தையும் திருப்பித் தரவில்லை எனவும் ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். மேலும் பணத்தை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு தடைக்கோரி கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், பணத்தை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிடமாட்டோம் எனவும் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை நாளை காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் எனவும், காலைக்குள் வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது எனவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.

Tags :
Advertisement