1969 முதல் 2024 வரை தாதா சாகேப் பால்கே விருது வாங்கியவர்களின் முழு லிஸ்ட்...
12:39 PM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement
இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி.பிரசாத், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை பழம் பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.
Advertisement
இந்த நிலையில் 54-வது தாதா சாகேப் பால்கே விருது பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தாதாசாகேப் பால்கே விருதுகள் பெற்றவர்கள் பட்டியல்:
| ஆண்டு | பெற்றவர் | திரைப்படத் துறை |
| 2022 | மிதுன் சக்ரவர்த்தி | இந்தி |
| 2021 | வஹீதா ரஹ்மான் | இந்தி |
| 2020 | ஆஷா பரேக் | இந்தி |
| 2019 | ரஜினிகாந்த் | தமிழ் |
| 2018 | அமிதாப் பச்சன் | இந்தி |
| 2017 | வினோத் கண்ணா | இந்தி |
| 2016 | காசினதுனி விஸ்வநாத் | தெலுங்கு |
| 2015 | மனோஜ் குமார் | இந்தி |
| 2014 | சசி கபூர் | இந்தி |
| 2013 | குல்சார் | இந்தி |
| 2012 | பிரான் | இந்தி |
| 2011 | சௌமித்ரா சாட்டர்ஜி | பெங்காலி |
| 2010 | கே.பாலச்சந்தர் | தமிழ் |
| 2009 | டி. ராமாநாயுடு | தெலுங்கு |
| 2008 | வி.கே.மூர்த்தி | இந்தி |
| 2007 | மன்னா டே | பெங்காலி, இந்தி |
| 2006 | தபன் சின்ஹா | பெங்காலி, இந்தி |
| 2005 | ஷியாம் பெனகல் | இந்தி |
| 2004 | அடூர் கோபாலகிருஷ்ணன் | மலையாளம் |
| 2003 | மிருணாள் சென் | பெங்காலி |
| 2002 | தேவ் ஆனந்த் | இந்தி |
| 2001 | யாஷ் சோப்ரா | இந்தி |
| 2000 | ஆஷா போஸ்லே | இந்தி, மராத்தி |
| 1999 | ஹிருஷிகேஷ் முகர்ஜி | இந்தி |
| 1998 | பிஆர் சோப்ரா | இந்தி |
| 1997 | கவி பிரதீப் | இந்தி |
| 1996 | சிவாஜி கணேசன் | தமிழ் |
| 1995 | ராஜ்குமார் | கன்னடம் |
| 1994 | திலீப் குமார் | இந்தி |
| 1993 | மஜ்ரூஹ் சுல்தான்புரி | இந்தி |
| 1992 | பூபன் ஹசாரிகா | ஆசாமிகள் |
| 1991 | பால்ஜி பெண்டர்கர் | மராத்தி |
| 1990 | அக்கினேனி நாகேஸ்வர ராவ் | தெலுங்கு |
| 1989 | லதா மங்கேஷ்கர் | இந்தி, மராத்தி |
| 1988 | அசோக் குமார் | இந்தி |
| 1987 | ராஜ் கபூர் | இந்தி |
| 1986 | பி. நாகி ரெட்டி | தெலுங்கு |
| 1985 | வி. சாந்தாராம் | இந்தி, மராத்தி |
| 1984 | சத்யஜித் ரே | பெங்காலி |
| 1983 | துர்கா கோட் | இந்தி, மராத்தி |
| 1982 | எல்வி பிரசாத் | இந்தி, தமிழ், தெலுங்கு |
| 1981 | நௌஷாத் | இந்தி |
| 1980 | பைடி ஜெயராஜ் | இந்தி, தெலுங்கு |
| 1979 | சோராப் மோடி | இந்தி |
| 1978 | ராய்சந்த் போரல் | பெங்காலி, இந்தி |
| 1977 | நிதின் போஸ் | பெங்காலி, இந்தி |
| 1976 | கானன் தேவி | பெங்காலி |
| 1975 | திரேந்திர நாத் கங்குலி | பெங்காலி |
| 1974 | பொம்மிரெட்டி நரசிம்ம ரெட்டி | தெலுங்கு |
| 1973 | ரூபி மியர்ஸ் (சுலோச்சனா) | இந்தி |
| 1972 | பங்கஜ் முல்லிக் | பெங்காலி & இந்தி |
| 1971 | பிருத்விராஜ் கபூர் | இந்தி |
| 1970 | பிரேந்திரநாத் சிர்கார் | பெங்காலி |
| 1969 | தேவிகா ராணி | இந்தி |