For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார் - அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு!

08:48 AM May 04, 2024 IST | Jeni
பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார்   அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு
Advertisement

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஏற்கெனவே 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும், வரும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : 18 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் மீண்டும் இணைந்த பிரபல நடிகர் - வெளியான புதிய தகவல்!

அந்த வகையில் ஹைதராபாத்தில் கடந்த மே 1-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தேர்தல் பரப்புரை வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், தேர்தல் விதிமுறைகளை மீறி, குழந்தைகளை பங்கெடுக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குழந்தைகள் சிலர் பாஜகவின் பரப்புரை பதாகைகள், காவி நிற பலூன்கள் ஆகியவற்றுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags :
Advertisement