பழங்குடியின மக்களை இழிவாக பேசியதாக நடிகர் விஜய் தேவரகொண்டா மீது புகார்!
சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'ரெட்ரோ' திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரெட்ரோ படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்ட பேசியபோது, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன் பாகிஸ்தானை குறிப்பிட்டு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது அங்குள்ள மக்கள் எங்களுடையவர்கள் என்று பேசினார்.
மேலும் பாகிஸ்தானியர்கள் 500 ஆண்டு பழமையான பழங்குடியின மக்கள் போல் அறிவில்லாமல் இருக்கின்றனர் என கடுமையாக விமர்சனம் செய்தார். திட்டுவதற்கு பழங்குடியின மக்களை அவர் சுட்டிக்காட்டியதாக ஏற்கெனவே சில பழங்குடியின அமைப்புகள் கண்டம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பழங்குடி இன மக்களை இழிவாக பேசியதாக நடிகர் விஜய் தேவரகொண்டா மீது புகார் எழுந்துள்ளது. அதன்படி லால் என்பவர் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் பழங்குடியின மக்களை அவர் அவமதிக்கும் வகையில் பேசியதாக புகார் தெரிவித்து குற்றம் சாட்டியுள்ளார்.