For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போக்குவரத்து விதிகளை மீறினால் நிறுவனத்திடம் புகார் - பெங்களூரு போலீசாரின் புதிய முயற்சி!

02:56 PM Dec 17, 2023 IST | Web Editor
போக்குவரத்து விதிகளை மீறினால் நிறுவனத்திடம் புகார்   பெங்களூரு போலீசாரின் புதிய முயற்சி
Advertisement

பெங்களூருவில் ஐடி ஊழியர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால், அவர்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் புகாரளிக்கவுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னணியில் உள்ளது. போக்குவரத்து நெரிசல், விதிமுறை மீறல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் விபத்துகளும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை தடுக்க பெங்களூரு போக்குவரத்து போலீஸார் புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர்.

முதல்கட்டமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் அமல்படுத்த முடிவெடுத்துள்ளனர். அதன்படி, இனிமேல் போக்குவரத்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வது, வேக வரம்பை மீறுவது, தலைக்கவசம் அணியாமல் இருப்பது, சீட் பெல்ட் அணியாமல் இருப்பது உள்ளிட்ட விதிமுறைகளை மீறுவோரை தீவிரமாக கண்காணிக்க முடிவெடுத்துள்ளனர்.

அவ்வாறு விதிமுறைகளை மீறும் ஐடி நிறுவன ஊழியர்களை புகைப்படம் எடுத்து ஆதாரத்துடன் அவர்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் புகார் அளிக்க முடிவெடுத்துள்ளனர். இந்த குற்றத்துக்காக போலீஸார் நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து போலீஸார் கூறுகையில், ‘‘பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் அதிகமாக உள்ள மாரத்தஹள்ளி, ஒயிட் ஃபீல்ட், கிருஷ்ணராஜபுரம், கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து விதிமுறைகள் அதிகளவில் மீறப்படுகின்றன. வெளிவட்ட சாலைகளில் ஐடி ஊழியர்கள் தலைக்கவசம் அணியாமல் அதிவேகத்தில் செல்வதால் விபத்துகள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்தவே அந்த ஊழியர்கள் குறித்து நிறுவனங்களிடம் புகார் அளிக்க முடிவெடுத்துள்ளோம்.

விதிமுறை மீறுவோரிடம் ஓட்டுநர் உரிமத்தை சோதிப்பதுடன், அவரது அலுவலக அடையாள‌ அட்டையையும் சோதிக்க இருக்கிறோம். அவற்றை படம் எடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஆதாரத்துடன் சமர்ப்பிக்க இருக்கிறோம். பணி இடத்தில் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டால், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவோர் அதிகரிப்பார்கள் என நம்புகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தை தொடர்ந்து பிற மண்டலங்களிலும் இதை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என்றனர்.

Tags :
Advertisement