For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போல் குழு” #Actor விஷால் தகவல்!

11:09 AM Aug 29, 2024 IST | Web Editor
“தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போல் குழு”  actor விஷால் தகவல்
Advertisement

தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போல், நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கொண்ட குழு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு நடிகர் விஷாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு, 5வது ஆண்டாக முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் பேசியதாவது;

என் பிறந்த நாளை எப்போதும் இந்த இடத்திற்கு வந்துதான் தொடங்குவேன். இவர்களை சந்திப்பது மிகப்பெரிய பாக்கியம். அவர்களுடைய ஆசீர்வாதம் மிகப்பெரிய பாக்கியம். நான் உணவு வழங்கவில்லை என்றாலும் அவர்கள் என்னை வாழ்த்துவார்கள். 20% பேருக்குதான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். எந்த கம்பெனிக்கு செல்கிறார்கள்? அவர்கள் சொல்வது உண்மையா? திரைப்படம் எடுக்கிறவர்களா?  என்பது குறித்து சுதாரிப்பு கொள்ள வேண்டும்.

ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும் ஒரு குழு அமைக்க  ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அமைக்கப்படும். பெண்ணுக்கு தைரியம் வேண்டும். அப்படி கேட்கிறவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். யாராக இருந்தாலும், பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும். தமிழ் சினிமாவிலும், காலம் காலமாக குற்றச்சாட்டு இருந்து கொண்டு தான் உள்ளது. இங்கும் அது போல் பிரச்சினைகள் இருக்கலாம்.

உப்மா கம்பெனிகள் ஒரு ஆபிஸ் போட்டு போட்டோ ஷூட் எடுத்து பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை என்றார்.

உங்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி என்பவர் புகார் கொடுத்துள்ளார் என்ற கேள்விக்கு, ஸ்ரீரெட்டி யார் என்பதே எனக்கு தெரியாது. அவர் செய்த சேட்டைதான் எனக்கு தெரியும். அவர் யார் என எனக்கு தெரியாது. யார் மீது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம். என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வேண்டும். நாங்கள் போலீஸ் இல்லை. யாராவது தவறாக நடந்தால் செருப்பால் அடியுங்கள். நடிகைகள் யாராவது எங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் குறித்த கேள்விக்கு,  ஸ்ட்ரைக் செய்து என்ன செய்யப் போகிறீர்கள்? எதற்கு ஸ்ட்ரைக்? அதனால் என்ன பயன்? பணம் இருக்கிறவர்கள் படம் எடுப்பார்கள். எல்லா தயாரிப்பாளர்களும் விமானம் பிடித்து பாம்பேக்கு சென்று அமேசான், நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் பேசி முடிவெடுங்கள்” எனப் பேசினார்.

Tags :
Advertisement