Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டு - கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார்!

08:37 AM Apr 05, 2024 IST | Web Editor
Advertisement

ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடி வந்த ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisement

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முகமது ஜசிம் என்பவர் கோவைக்கு
சென்று கொண்டிருந்த போது ஈரோடு ரயில் நிலையத்தில் அவருடைய ஐ-பேட்
திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு இருப்பு பாதை காவல் நிலையத்தில் ஜசிம் புகார்
அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றுத்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஓம்கர வெங்கடசுப்பையா என்ற மாணவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்லூரியில் பிடெக் படித்து வந்த இவர் சில காரணங்களுக்காக கல்லூரியில் இருந்து சஸ்பென்ஸ் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து திருடியதை ஒப்புக்கொண்ட அவரிடம் இருந்து ஐ-பேட் மற்றும் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரித்த போது, இவர் தொடர்ந்து பல நாட்களாக பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஓம்கர வெங்கடசுப்பையாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags :
CrimeErodeMobile TheftPoliceRailway station
Advertisement
Next Article