Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த கோவை மாணவி!

06:24 PM Dec 16, 2024 IST | Web Editor
Advertisement

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த மோனி ஸ்ரீ தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

Advertisement

கோவை கணபதி பகுதியை சேர்ந்த மணிகண்டன், மனோரஞ்சிதம் தம்பதிக்கு மோனிஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் சிறு வயதில் இருந்தே சின்கின் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளரும், உலக கராத்தே நடுவருமான கணேஷ்மூர்த்தியிடம் கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். இதன் மூலம் பல மாவட்ட, மாநில, தேசிய கராத்தே போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார் . இந்நிலையில் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற (எஸ்.ஜி.எப்.ஐ 2024-25) சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 68-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டார்.

இதில் மகாராஷ்டிரா, கேரளா தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, சண்டிகர் என இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் இருந்தும் தகுதி பெற்ற மாணவ, மாணவியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்ட கோவையைச் சேர்ந்த மாணவி மோனி ஸ்ரீ 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான கராத்தே போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப்பதக்கத்தை வென்று தமிழகத்தின் கராத்தே வரலாற்றில் முக்கிய சாதனைப் படைத்துள்ளார்.

இந்நிலையில் கோவை திரும்பிய மாணவி மோனி ஸ்ரீ-க்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. பின்னர் மோனி ஸ்ரீக்கும் பயிற்சியாளர் கணேஷ்மூர்த்திக்கும் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், 30 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா செந்தில்குமார், வேர்ல்டு கராத்தே ஃபெடரேஷன் முத்துராஜ் மற்றும் கோவை மாவட்ட கராத்தே நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு மாணவி மோனி ஸ்ரீ க்கு மாலைகள் அணிவித்தும் பூச்செண்டு வழங்கியும் வரவேற்றுள்ளனர் .

Tags :
covaikarateNews7Tamilnews7TamilUpdatesSports
Advertisement
Next Article