For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா உயிரிழப்பு!

07:17 PM Dec 16, 2024 IST | Web Editor
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா உயிரிழப்பு
Advertisement

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி பாஷா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட “அல் உம்மா” இயக்க தலைவர் பாஷா, உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 8 மாதங்களாக தொடர் பரோலில் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று திடீரென உடல்நிலையில் மோசமாக பாதிப்பு ஏற்பட்டு, கோவை பீளமேடு PSG தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிக்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தொடர்ந்து கோவை உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ்கார்டனில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலரும் நேரில் வந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags :
Advertisement