For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம்!

09:25 AM Feb 28, 2024 IST | Web Editor
கோவை   பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம்
Advertisement

கோவை - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரம் மாா்ச் 11-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான கோவை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் கோவையிலிருந்து தினமும் காலை 5 மணிக்கு கிளம்பி வந்தது. இதற்கேற்ப காலையில் தயாராகி ரயில் நிலையம் வருவதில் பயணிகள் பலருக்கும் சிக்கல் இருந்து வந்தது. எனவே பல்வேறு தரப்பில் இருந்து தெற்கு ரயில்வே கோட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. பலநாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த புகார்கள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து, காலை 7.25 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கத்தில், பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும்.

இந்த நேர மாற்றம் வரும் மாா்ச் 11-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதனிடையே, கோவை - கேஎஸ்ஆர் பெங்களூரு இடையேயான உதய் எக்ஸ்பிரஸ், புதன்கிழமை தவிர, இதர நாட்களில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவையானது, வரும் மார்ச் 5-ம் தேதி முதல் வாரத்தின் அனைத்தும் நாட்களும் இயக்கப்படும்” என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மார்ச் 11 முதல் காலை 7.25 மணிக்கு இந்த ரயில் கோவையில் இருந்து புறப்படும். அங்கிருந்து காலை 8.03 மணிக்கு திருப்பூர், 8.42க்கு ஈரோடு, 9.32க்கு சேலம், 10.51க்கு தர்மபுரி, மதியம் 12.03க்கு ஓசூர் மற்றும் மதியம் 1.50 மணிக்கு பெங்களூரு வந்தடையும். பின்னர் மதியம் 2.20 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, 3.10க்கு ஓசூர், மாலை 4.22க்கு தர்மபுரி, 5.57க்கு சேலம், 6.47க்கு ஈரோடு, 7.31 க்கு திருப்பூர் மற்றும் 8.45 மணிக்கு கோவை வந்து சேரும்.

Tags :
Advertisement