For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வந்தே பாரத் ரயிலில் அளித்த உணவில் கரப்பான் பூச்சி! பயணிகள் அதிர்ச்சி!

05:22 PM Jun 20, 2024 IST | Web Editor
வந்தே பாரத் ரயிலில் அளித்த உணவில் கரப்பான் பூச்சி  பயணிகள் அதிர்ச்சி
Advertisement

வந்தே பாரத் விரைவு ரயிலில் கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். 

Advertisement

விதித் வர்ஷ்னே என்பவர் தனது குடும்பத்தினருடன் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு  நேற்று முன்தினம் (ஜுன் 18) வந்தே பாரத் ரயிலில் சென்றுள்ளார்.  அப்போது,  ரயிலில் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்ட விதித்,  அதனை புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.

தொடர்ந்து ரயில் போக்குவரத்துத் துறை அமைச்சரையும், அமைச்சகத்தையும் மேற்கோள் கோட்டி, ரயிலில் உணவு விநியோகிக்கும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார்.  விதித் அளித்த புகாருக்கு 2 நாட்களுக்குப் பிறகு,  இந்திய ரயில் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமும், ரயில் போக்குவரத்துத் துறையும் பதிலளித்துள்ளது.

அவர்கள் இச்சம்பத்திற்கு மன்னிப்புக் கோரியதுடன்,  தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து ஐஆர்சிடிசி-யின் எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ”உங்கள் பயணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.  இந்த சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டதுடன்,  இதில் சம்பந்தப்பட்ட உணவு சேவை வழங்குபவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் ராணி கமலாபதி ரயில் நிலையத்திலிருந்து, ஜபல்பூருக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணித்த பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் இதேபோன்று கரப்பான் பூச்சி கிடந்ததாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement