ஆர்டர் செய்தவருக்கு பாம்பு டெலிவரி - வாடிக்கையாளர் அதிர்ச்சி!
பெங்களூருவில் அமேசானில் எக்ஸ் பாக்ஸ் ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பெட்டியில் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த தம்பதிகள் அமேசான் நிறுவனத்தில் எக்ஸ் பாக்ஸ் எனப்படும் விளையாட்டு சாதனம் ஒன்றை ஆர்டர் செய்திருந்தனர். அவர்களுக்கு எக்ஸ் பாக்ஸ் டெலிவரி செய்யப்பட்டது. டெலிவரிக்காக வந்த நபரிடம் இருந்து அதனை வாங்கியபோது அதற்குள் ஏதோ நகருவது போல் தெரிந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் திறந்த போது அந்த பெட்டிக்குள் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நல்வாய்ப்பாக அந்த பாம்பு பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் சிக்கி நகர முடியாமல் இருந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதன்பேரில் மொத்த பணத்தையும் திரும்பத் தருவதாக அமேசான் நிறுவனம் கூறியது.
தொடர்ந்து அந்த தம்பதியினர் மொத்த பணத்தையும் திரும்ப பெற்றதாக தெரிவித்தன்ர. மேலும் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனிடையே அமேசான் டெலிவரி பெட்டியில், பாம்பு இருக்கும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
In a shocking incident, a family on Sarjapur Road received a live Spectacled Cobra with their Amazon order for an Xbox controller.
The venomous snake was fortunately stuck to packaging tape, preventing harm.#ITReel #Sarjapur #AmazonOrder #SnakeInAmazonOrder pic.twitter.com/EClaQrt1B6
— Prakash (@Prakash20202021) June 19, 2024