Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

05:25 PM Jan 05, 2025 IST | Web Editor
Advertisement

குஜராத்தின் போர்பந்தர் விமான நிலையத்தில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 

Advertisement

இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ‘ஏஎல்எச் துருவ்’ குஜராத் மாநிலம் போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவலறிந்த உடன் தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

முதற்கட்ட தகவலின்படி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் மூன்று பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து இந்திய கடலோர காவல் படை விசாரணையை தொடங்கியுள்ளது.

Tags :
Gujarathelicopter crashIndian Coast Guard
Advertisement
Next Article