For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

திருவண்ணாமலையில் ஏரியில் கால் தவறி விழுந்த 11ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
08:56 PM Jan 10, 2025 IST | Web Editor
ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
Advertisement

திருவண்ணாமலையில் ஏரியில் கால் தவறி விழுந்த 11ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் நந்தகுமார். நந்தகுமார் அருகே உள்ள அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை பள்ளிக்குச் சென்ற அவர் மதிய சாப்பாட்டிற்காக  வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள ஏரி கரைக்கு சென்றார்.

எதிர்பாராத விதமாக அவர் கால் தவறி ஏரியில் விழுந்தார். சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவருடைய தம்பி, நந்தகுமாரை தேடி சென்றார். அப்போது மாணவன் அணிந்திருந்த கால் செருப்பு கரையோரம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய தம்பி அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வந்து தேடியும் நந்தகுமார் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து கண்ணமங்கலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த  தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கிய அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் நந்தகுமாரை உயிரிழந்த நிலையில் மீட்டனர். பின்னர் விரைந்து வந்த கண்ணமங்கலம் காவல் துறையினர் அவரது உடரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement