Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”ஜார்க்கண்டில் பாதுகாப்பு படை மற்றும் மாவோயிஸ்ட் இடையே மோதல் - மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்கண்டில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட்கள் இடையே நடைபெற்ற மோதலில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
03:52 PM Aug 13, 2025 IST | Web Editor
ஜார்கண்டில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட்கள் இடையே நடைபெற்ற மோதலில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
Advertisement

இந்தியவின் பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில்  மாவோய்ஸ்ட்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி பாதுகாப்பு படையினருக்கும் மாவோய்ஸ்ட்களுக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகிறன.

Advertisement

இந்த நிலையில்,ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் கோயில்கேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவுதா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக  ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அப்பகுதியில், மாநில காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப்படை ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போதுபதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப்படையினர் மீது   துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Tags :
GunfightIndiaNewsJarkhandlatestNewsMaoistsecurityforce
Advertisement
Next Article