கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கலைகட்டிய கேக் விற்பனை!
மயிலாடுதுறையில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு புது வகையான கேக்குகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கொண்டாட உள்ளது. இதனை
முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள பேக்கரிகளில் கிறிஸ்துமஸ் கேக் வாங்குவதில்
பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்காக பல்வேறு விதமான கேக்குகள் பேக்கரிகளில் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த தொடங்கி உள்ளது .
இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து கேக்கினை வாங்கிச் சென்றனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு என தனித்துவமாக கிறிஸ்மஸ் தாத்தா , கிப்ட் , மரம் , ஸ்டார் உள்ளிட்டவை கேக் மீது வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அது மட்டும் இன்றி பார்பி பொம்மையை கேக்குகளால் அலங்கரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வாங்கிச் சென்றனர்