"சோழமுத்தா எல்லாம் போச்சா" - வெளியானது ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ட்ரெய்லர்!
இயக்குநர் எழில் இயக்கம் மற்றும் விமல் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க எழில் முடிவெடுத்தார். அதன்படி, படத்தையும் எடுத்து முடித்துள்ளார். இப்படத்திலும் விமல்தான் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் விமலுடன் இணைந்து ஜனா, பூஜிதா பொன்னடா, ஹர்ஷிதா பண்ட்லாமுரி, புகாஷ், ரவி மரியா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். ‘தேசிங்கு ராஜா’ படம் வெளியாகி 12 வருடங்களுக்கு பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
🎬 The wait is over! The trailer of #Desinguraja2 is here – loaded with comedy, chaos & full-on family fun! 💥😂
👉 Watch now & witness the fun explode on screen! 🎯🔥https://t.co/BXFum1NLni#Trailer #TamilCinema pic.twitter.com/DeoAxumRv6— Infinity Creations (@infinity_ravi) July 4, 2025
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் காமெடி பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. படத்தில் பல காமெடி நடிகர்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.