சித்திரை திருவிழா 2025 - பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வைகை பொதுப்பணித்துறை!
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு வைகை பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
07:56 PM May 08, 2025 IST | Web Editor
Advertisement
மதுரை வைகை ஆற்றில் வருகிற 12-ஆம் தேதி காலை கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
Advertisement
இன்று(மே.08) முதல் வருகிற 12-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மொத்தமாக 215 மில்லியன் கன அடி தண்ணீர் இதற்காக அணையில் இருந்து திறக்கப்பட
உள்ள நிலையில், தற்போது வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீரை அணையில் இருந்து நீர்மின் நிலையம் வழியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.
வைகை ஆற்றின் வழியாக தேனி மாவட்டத்தை கடந்து மதுரை மாவட்டம் செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என
பொதுப்பணித்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது