'வேலை அழுத்தத்தால்' ஓரே ஆண்டில் 20 கிலோ எடை அதிகரித்த சீன பெண்! அடுத்து என்ன செய்தார் தெரியுமா?
சீனப் பெண்ணின் வேலை மன அழுத்தம் காரணமாக ஒரே ஆண்டில் 20 கிலோ எடை அதிகரித்தது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், தன் வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மிகவும் அவதிப்பட்டுள்ளார். அவரை சரி செய்வதற்காக அவரின் பெற்றோர் அந்த வேலையை விட்டுவிட்டு தங்களின் முழு நேர மகளாக இருந்தால் மாதம் 4,000 யென் (இந்திய மதிப்பில் 49,000) தருவதாகக் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணும் தன் வேலையை விட்டு விட்டு பெற்றோர்களுக்கு உதவி செய்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என மன அழுத்தம் இல்லாத முழுநேர மகளாக இருந்து வருகிறார். சமீபத்தில் இது தொடர்பாக பதிவு இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், தற்போது சீனப் பெண் ஒருவர் வேலை தொடர்பான மன அழுத்தத்தால் ஒரே ஆண்டில் 20 கிலோ எடை அதிகரித்ததாகக் கூறினார். தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் பகுதியைச் சேர்ந்த ஓயாங் வென்ஜிங்(24) தனது சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : தனிப்பட்ட முறையில் #Whatsapp, இமெயில் அனுப்பிய மனுதாரர் | வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு!
இந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது :
தனது எடை 60 கிலோவிலிருந்து 80 கிலோவாக உயர்ந்தது. இந்த எடை உயர்வு தனது உளவியல் மற்றும் உடல் நலனுக்கான பேரழிவாக மாறியது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் தனது வேலையை விட்டு வெளியேறிய பிறகு தான் மிகவும் நன்றாக உணர்கிறேன். தொடர்ந்து ஓவர் டைம் வேலை செய்வது, உணவு பழக்கம், உணவு உட்கொள்ளும் நேரம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கிறது"
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.